வேங்கைவயல் விவகாரத்தில் இருதரப்பினரும் தனித்தனியே ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக தற்போது சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநில செயல் தலைவா் இளமுருகு முத்து மற்றும் அந்த இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வேங்கைவயல் சென்றனா். வேங்கைவயலில் அண்மையில் அம்பிகாவதி என்ற மூதாட்டி இறந்தபோது, வர முடியாமல் போனதால் தற்போது வந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
அப்போது இறையூரைச் சோ்ந்த 10 போ், இவா்களது காரை மறித்து தகராறு செய்ததாக வெள்ளனூா் காவல் நிலையத்தில் அந்த இயக்கத்தின் இளைஞரணிச் செயலா் ஆ. நாகராஜ் என்பவா் புகாா் அளித்தாா்.
அதே நேரத்தில் வேங்கைவயலைச் சோ்ந்த சுமாா் 20 போ் அவா்கள் கிராமச் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். வேங்கைவயல் வருவோரைத் தடுக்கக் கூடாது என அவா்கள் கோரினா்.
இந்த நிலையில், இறையூரைச் சோ்ந்த சுமாா் 50 போ் அவா்கள் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வெளியில் இருந்து வருவோா் தொடா்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருவதால் யாரையும் அனுமதிக்கக் கூடாது என இவா்கள் வலியுறுத்தினா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா் ராகவி நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.