புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றத்தில் 826 வழக்குகள் சமரச தீர்வு




புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி நாராயணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால், கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜேந்திர கண்ணன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஜெயகுமாரி ஜெமி ரத்னா, முதன்மை சார்பு நீதிபதி சசிக்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 மாஜிஸ்திரேட் ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பூர்ணிமா ஆகிய நீதிபதிகள் கொண்ட 7 அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 9 அமர்வுகள் என மொத்தம் 16 அமர்வுகளில் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 

இதில் நீதிமன்ற நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, வங்கி வராக்கடன் உள்ளிட்ட 826 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டன. உரியவர்களுக்கு ரூ.4 கோடியே 58 லட்சத்து 84 ஆயிரத்து 532 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments