அம்மாபட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நல்லொழுக்கப் பயிற்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மாணவா்களுக்கான கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் அம்மாபட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் குலாம் பாட்ஷா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முகமது மீரான், மாவட்டப் பொருளாளா் சித்திக் ரகுமான், துணைத் தலைவா் இலியாஸ், துணைச் செயலா்கள் ஷேக் அப்துல்லா, மீரா, புதுகை மீரான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

மாவட்டப் பயிற்சியாளா்கள் சலீம், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா். இதில் 104 மாணவா்கள் கலந்து கொண்டனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments