கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் தெருவிளக்கு எரியவில்லை: பொதுமக்கள் சார்பில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளிப்பு!கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் எரியாத தெருவிளக்கை சரி செய்து தர வேண்டி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் சாக்கடை மற்றும் குப்பைகளால் சூழப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியாததால் இருளில் மூழ்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எரியாத தெருவிளக்கை சரி செய்து தர வேண்டி நேற்று 08/05/2023 அவுலியா மக்கள் சார்பில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமியிடம் மனு அளித்தனர். 

மனுவில் கூறியிருப்பதாவது, 
கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் தெருவிளக்கு முழுவதும் எரியவில்லை. ஏற்கனவே அவுலியா நகர் சாக்கடையில் மூழ்கி இருக்கிறது. அதுவும் உங்களுக்கு தெரியும். அதிலும் தெருவிளக்கு எரியாமல் மக்கள் இருளில் தவிக்கின்றனர். ஆகவே விரைவில் தெருவிளக்கு எரியாமல் இருப்பதை சரி செய்து தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments