புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரித்து சிகிச்சை விபரங்களை அவர் கேட்டறிந்தார். செல்லப்பிள்ளை பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் மூலமாக பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம், தாய்ப்பால் கொடுக்கும் முறை, சீம்பாலின் முக்கியத்துவம், பச்சிளம் குழந்தை பராமரிப்பு, பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு, சரியான குழந்தை வளர்ப்பு திறனை மேம்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் அளித்தல் மற்றும் சிகிச்சை பெற்று திரும்பும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு குறித்து ஆலோசனை அளித்தல் மற்றும் வீடுகள் பார்வை மூலம் தொடர் கவனிப்பு அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள `செல்லப்பிள்ளை' எனும் ஆலோசனை மையம் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கப்பட்டது.
தற்போது வரை 135 வேலை நாட்களில், 4,276 பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தை பராமரிப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான இணை உணவு கொழுக்கட்டைகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை மாவட்டத்தில் விரிவு படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் இந்திராணி, கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜ்மோகன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.