பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா
பட்டுக்கோட்டையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நரியம்பாளையத்தில் ரூ.20கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது விழாவில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய பேருந்துநிலையம் அமைக்க நிதி ஒதுக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பட்டுக்கோட்டையில் மார்க்கெட் மற்றும் சீர்மிகு பள்ளி திட்டங்களை சுட்டிக் காட்டிய அவர், பாதாள சாக்கடை திட்டத்தையும் பட்டுக்கோட்டை நகரில் செயல்படுத்தி கொசுத்தொல்லை இல்லாத நகராக பட்டுக்கோட்டையை மாற்ற கோரிக்கைவிடுத்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கையை அங்கு கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments