புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மேலும் 1,327 பள்ளிகளில் விரைவில் அமல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மேலும் 1,327 பள்ளிகளில் விரைவில் அமல்படுத்தப்படுகிறது.

காலை உணவு திட்டம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சியில் தற்போது 19 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் 1,327 பள்ளிகள்

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் மேலும் 1,327 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சமையல் கூடம் அமைத்தல் உள்பட கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.

விரிவுபடுத்தப்பட்ட இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் கூடுதலாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுவார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments