மஞ்சுவிரட்டில் காளை முட்டி இறந்த போலீஸ்காரர் மனைவிக்கு ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் நிதி உதவி போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
பொன்னமராவதி அருகே உள்ள கே.புதுப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூர் கிராமத்தில் கடந்த மே மாதம் 3-ந் தேதி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மீமிசல் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணன் காளை முட்டியதில் இறந்தார். இதையடுத்து அவரது மனைவி சபரிக்கு, புதுக்கோட்டை மாவட்ட போலீசில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் போலீஸ் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் தாமாக முன்வந்து ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்தை நிதி உதவியாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவிடம் வழங்கினர். காளை முட்டி இறந்து போன நவநீதகிருஷ்ணனின் மனைவி போலீசான சபரிக்கு குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் பணிபுரிய விருப்பம் தெரிவித்த இடத்திற்கே பணியிட மாறுதல் ஆணையும் பிறப்பிக்கப்பட்டு நிதியையும் போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments