கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் காதர் அவர்களுக்கு 6 யூனிட் இரத்தம் கிடைத்துவிட்டது!

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் காதர் அவர்களுக்கு 6 யூனிட் இரத்தம் கிடைத்துவிட்டது.புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு இதய அறுவை சிகிச்சைக்காக திருச்சியில் ஏதாவது ஒரு வகை இரத்தம் 6 யூனிட் தேவை என்று நமது GPM மீடியாவில் நேற்று  (10.06.2023) சனிக்கிழமை பதிவு செய்திருந்தோம்.
அதனடிப்படையில் பல்வேறு இயக்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் இரத்த ஏற்பட்டாளர்கள் வாட்ஸ்ஆப் குழுமத்தினர் முயற்சியால் இன்று 11/06/2023 (ஞாயிற்றுக்கிழமை) 6 யூனிட் இரத்தம் கிடைத்துவிட்டது.
வெவ்வேறு ஊரை சேர்ந்த 6 நபர்கள் 6 யூனிட் இரத்தத்தை தானமாக வழங்கினர். இரத்தம் வழங்கிய உறவுகளுக்கு அக்குடும்பத்தினர் சார்பாகவும், GPM மீடியாவின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை பகிர்ந்து உதவிய அனைத்து முகநூல் சொந்தங்கள், வாட்ஸ்ஆப் உறவுகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த சகோதரர்களுக்கு குடும்பத்தார் மற்றும் GPM மீடியாவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..!!
 வருகிற 21/06/2023 புதன்கிழமை இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனவே நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து பூரண குணம் பெற அனைவரும் பிராத்தனை (தூஆ) செய்யூங்கள்.

குறிப்பு: இரத்தம் தேவை என்ற தகவலை இனி யாரும் பகிர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: முகம்மது ராவுத்தர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments