சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF எக்ஸ்பிரஸ் ரயிலில் முழுவதும் மின்சார இஞ்சின் மூலம் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு



திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை  இயக்கப்பட்டு வருகிறது .



வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் 
ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்  திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள்  செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்
 
தாம்பரம் செங்கோட்டை அதி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு, 
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்),
மயிலாடுதுறை சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
முத்துப்பேட்டை,
பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி,
காரைக்குடி சந்திப்பு, 
அருப்புக்கோட்டை,
விருதுநகர் சந்திப்பு, 
திருநெல்வேலி சந்திப்பு,
சேரன்மகாதேவி,
அம்பாசமுத்திரம்,
பாவூர்சத்திரம்,
தென்காசி சந்திப்பு, 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது

லோகா மாற்றம் 

20683/20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் கடந்த சில நாட்களாக இரு மார்க்கத்திலும் தாம்பரம் முதல் திருவாரூர் வரை எலக்ட்ரிக் லோகாவில் இயக்கப்பட்டு பின்பு 
திருவாரூர் முதல் செங்கோட்டை வரை டீசல் லோகாவில் இயக்கப்பட்டு வந்தது 
 
இந்நிலையில் 20683/20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் வருகின்ற  18.06.2023 முதல் முழுவதும் மின்சார என்ஜின் கொண்டு இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இன்னும் மின்மயமாக்கல் செய்யப்படாத திருவாரூர் - காரைக்குடி தடத்தில் மட்டும் டீசல் என்ஜின் ,மின்சார என்ஜின் முன் இணைக்கப்பட்டு அந்த தடத்தின் முடிவில் மீண்டும் பிரிக்கப்படும். 

20683 தாம்பரம்- செங்கோட்டை

20683 தாம்பரம்- செங்கோட்டை-  சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முற்றிலும் மின்சார எஞ்சின் கொண்டு இயக்கப்பட உள்ளது.
இத்துடன் ,தாம்பரம் -செங்கோட்டை 20683 அதி விரைவு ரயிலில் எலக்ட்ரிக்கல் இன்ஜினுடன் டீசல் இன்ஜின் திருவாரூரில் இணைக்கப்பட்டு பின்பு காரைக்குடியில் கழற்றப்படும்.

20684 செங்கோட்டை- தாம்பரம்

மறுமார்க்த்தில், 20684 செங்கோட்டை- தாம்பரம்  சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முற்றிலும் மின்சார எஞ்சின் கொண்டு இயக்கப்பட உள்ளது.

இத்துடன் , செங்கோட்டை- தாம்பரம் 20684 அதி விரைவு ரயிலில் எலக்ட்ரிக்கல் இன்ஜினுடன் டீசல் இன்ஜின் காரைக்குடியில் இணைக்கப்பட்டு பின்பு திருவாரூரில் கழற்றப்படும்.

எரிபொருள் சிக்கனம் மற்றும் காற்று மாசு குறைப்பு நடவடிக்கையாக தெற்குரயில்வே இதனை செயல்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments