பட்டுக்கோட்டையில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் திருட்டு
பட்டுக்கோட்டையில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் திருட்டுப்போனது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பட்டுக்கோட்டையில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் திருட்டுப்போனது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


வங்கியில் பணம் எடுத்தார்

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதம்பை வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 41). விவசாயி. நேற்று முன்தினம் பாலன் பட்டுக்கோட்டை பெரிய தெருவில் உள்ள அரசு வங்கியில், தனது கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை விவசாய தேவைக்காக எடுத்துள்ளார். இந்த பணத்தை தனது ஸ்கூட்டி வாகனத்தில் வைத்து பூட்டிக்கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்றார்.
ரூ. 2லட்சத்து 18 ஆயிரம் திருட்டு

இந்நிலையில் மேலும் கூடுதலாக பணம் தேவைப்பட்டதால், பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். முன்பு ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே பணம் எடுக்க சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் பாலனின் ஸ்கூட்டியை உடைத்து அதில் இருந்த ரூ. 2லட்சத்து 18 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பாலன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக வங்கியில் பாலன் பணம் எடுக்க சென்ற போது மர்ம நபர் ஒருவர் மாஸ்க் அணிந்தவாறு பாலனின் பின்புறம் வந்து நின்றார்.

கண்காணிப்பு கேமரா

பாலன் பணம் எடுத்ததை அறிந்த, அந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மேலும் ஒரு நபருடன் சேர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்று பணத்தை திருடி சென்றது அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.பட்டுக்கோட்டை நகரின் முக்கிய பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் 2 நபர்கள் ஸ்கூட்டி வாகனத்தை உடைத்து, அதில் உள்ள பணத்தை திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments