திருச்சி-பெங்களூரு இடையே கூடுதல் விமான சேவை... பயணிகள் ஹேப்பி




திருச்சி விமான நிலையம் ஒரு முக்கிய பரிமாற்ற நிலையமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பலர் வெளிநாடுகளுக்கும் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் பயணம் செய்து வருகின்றனர்.

​திருச்சி பன்னாட்டு விமான நிலையம்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா காலத்திற்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருந்தது.

​பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
அதனைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. தற்போது பயணிகளின் அதிகரிப்பால் டிக்கெட் தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு வந்துள்ளது. ஏற்கனவே திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமான டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டதால் கூடுதல் விமானங்களை இயக்க மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

​சற்று குறைவாக உள்ளது
கடந்த மே மாதத்தை ஒப்பிடும் போது கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பயணிகள் என்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. கொரோனா காலத்துக்கு முந்தைய நிலைக்கு சற்று குறைவாக உள்ளது அவ்வளவு தான்.

​திருச்சியில் இருந்து பெங்களூரு
இந்நிலையில் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு இரண்டு சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் தற்போது கூடுதலாக ஒரு சேவையை இயக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த சேவையானது திங்கள் முதல் வெள்ளி வரை இயக்கப்படுகிறது. சனி ஞாயிறு இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

​பயணிகளிடையே மகிழ்ச்சி
திருச்சி டூ பெங்களூரு இடையே கூடுதல் விமான சேவை வேண்டும் என பல நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது விமான சேவை கூடுதலாக விடப்படும் என அறிவித்திருப்பது திருச்சி மக்கள் மட்டுமல்லாது திருச்சி விமான நிலையம் வழியாக செல்லும் அனைத்து பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments