கோபாலப்பட்டிணத்தில் இப்படி ஒரு அழகான இடமா?





மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் இப்படி ஒரு அழகான இடமா ? - வாங்க எங்கே உள்ளது பார்க்கலாம் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம்  கடற்கரை கிராமம் ஆகும். இங்கு பிரதான தொழில் மீன்பிடி தொழில் 

GPM Beach 

இயற்கை அழகோடு வசீகரிக்கும் கோபாலப்பட்டிணம்‌ கடற்கரை அழகான மணல் பரப்பு இயற்கையான காற்று அமைதியாக அலை பச்சை பசேல்ன காட்சியளிக்கும் மரங்கள் உள்ளன.

மெயின் கடற்கரையில் இருந்து வலது பக்கத்தில் கொஞ்சம் தூரம் சென்றால் கருவேல மரங்கள் இருக்கும் அதை தாண்டி கடற்கரை ஓரத்தில்  பச்சை பசேல் என  பார்ப்பவர்கள் கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டும் வகையில்  வளர்ந்து நிற்பதை அப்பகுதியில் செல்லக் கூடியவர்களை ஈர்க்கும் செடிகள் உள்ளன

இப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக பெரிய பெரிய கடற்கரையில் இருப்பது போன்று காட்சியளிக்கிறது.

மரம் வளர்ப்போம் !! மழை பெறுவோம் !!
 
கடற்கரை ஓரத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும்

பச்சை பசேல்ன   காட்சியளிக்கும் செடிகள் 

புகைப்படங்கள் எடுக்க ஏற்ற இடம் 

நண்பர்களுடன் சென்று  நேரில் கண்டு ரசியுங்கள்

இது போன்று நமதூர் பற்றிய இயற்கையான புகைப்படங்களை எடுத்தால் எங்களுக்கு   அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்


I Love Gopalapattinam - Beach Lover

ஆயிரம் கவலைகள் இருந்தாலும்

நம்ம ஊரு கோபாலப்பட்டிணம் கடற்கரைக்கு சென்று

கடல் அலைகளின் அழகையும் அந்த காத்துல நம்ம ஊர பாக்குற சுகமே தனிதான்..

கவலைகள் காத்தோட கரைவது போன்ற ஒரு நிம்மதி

வெளிநாடு வெளியூர் வாழ் கோபாலப்பட்டிணம் உறவுகளுக்கும் நம்ம ஊரு கோபாலப்பட்டினம் கடற்கரைக்கு இனைப்பிரியாத நட்பு இருக்கும்

உலகில் எந்த கடற்கரை சென்றாலும் நம்ம ஊரு கடற்கரை போல வருமா... நம்ம ஊரு கடற்கரை நினைப்பு தான் வரும்!














எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments