அதிராம்பட்டினம் தக்வா பள்ளி மீன் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் 3 மீன்கள் ரூ.15,995 க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது. அதேபோல் நேற்று 5 மீன்கள் ரூ.17,795 க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட இந்த கூரை கத்தாழை வகை மீன்களை இப்பகுதி மக்கள் அதிகளவில் விரும்பி உண்ண மாட்டார்கள்.
அப்படி இருந்தும் இவ்வளவு விலைக்கு ஏலம் போக என்ன காரணம் என்றால் அதன் வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற சதைதான். ஆம், 3 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட கூரை கத்தாழை மீன்கள் வலையில் பிடிபட்டால் மீனவருக்கு புதையல் கிடைத்ததைபோன்றுதாகும். காரணம் மீன் கறி அல்ல. அதன் வயிற்றில் உள்ள நெட்டியின் எடை.
அந்த நெட்டியை மட்டும் எடுத்து பல ஆயிரத்துக்கு விற்பனை செய்வார்கள். மீன்களுக்கு மிதவை தன்மை கொடுக்க வயிற்றில் இருக்கும் இந்த நெட்டி மருத்துவ தன்மை கொண்டது என்றும், அதிகளவில் இது ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மீனவர்கள், மீன் வியாபாரிகள் கூறுகிறார்கள்.
மற்ற மீன்களின் வயிற்றில் நெட்டி இருந்தாலும், கூரை கத்தாழை மீன்களின் நெட்டிக்கு மார்க்கெட்டில் தனி மவுசு இருப்பதால் அதன் விலையும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக அதிக எடை கொண்ட ஆண் மீனாக இருந்தால் விலை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள். பொதுவாக இந்த கூரை கத்தாழை மீன்களை குழம்பு, பொரியல் போன்றவற்றுக்கு பயன்படுத்துவதை விட கருவாடு தயாரிக்கவே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
கூரை கத்தாலை சிறிய மீன் கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுவே ஒரு மீன் 3 கிலோவுக்கு மேல் இருந்தால், நாம் மேலே சொன்னதுபோல் மீனவருக்கு புதையல்தான். அதன் வயிற்றில் இருக்கும் நெட்டியை 100 கிராம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கலாம் என்கிறார்கள்.
இதே பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் கூரை கத்தாழை மீன் நெட்டிக்காகவே ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இதேபோல் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்த பால்மணி என்ற மீனவருக்கு ஒரே வலையில் 165 கூரை கத்தாழை மீன்கள் சிக்கின. 27 கிலோ எடைகொண்ட இந்த மீன்கள் துறைமுகத்தில் ரூ.1 கோடி மேல் ஏலம் போனது. இப்படி இந்த நெட்டியின் மூலமாகவே பல மீனவர்கள் கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்கள்
News Credit : Adirai Pirai
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.