சென்னையில் 7-வது ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி வருகிற 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. இப்போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டிக்கான கோப்பை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழகம் வந்தடைந்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற நிலையில் திண்டுக்கல்லில் இருந்து நேற்று புதுக்கோட்டை வந்தது. மாவட்ட விளையாட்டரங்கத்தில் இந்த கோப்பை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோப்பையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் காட்சிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசுகையில், "இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னை மாறி வருகிறது. விளையாட்டு துறையில் தி.மு.க. அரசு முத்திரை பதித்து வருகிறது. இந்திய அணியினர் இந்த போட்டியில் சாதிப்பார்கள்'' என்றார். முன்னதாக ஆக்கி வீரர்களுக்கு மரக்கன்றுகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் உள்பட வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். கோப்பையை பொதுமக்கள் உள்பட அனைவரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும் அதனை புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர். கோப்பை மன்னார்குடி கொண்டு செல்லப்பட்டது. வருகிற 1-ந் தேதி சென்னை சென்றடைகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.