கோபாலப்பட்டிணத்திற்கு இன்று (ஆக-2) அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST.ராமச்சந்திரன் MLA மைத்தாங்கரை சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்ட வருகை!கோபாலப்பட்டிணத்திற்கு இன்று ஆகஸ்ட் 02  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் S.T ராமச்சந்திரன் MLA மைத்தாங்கரை சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்ட வருகை தருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா  நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் மையத்தாங்கரை சுற்றுச்சுவர் அமைக்க வேண்டி அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினரிடம் ஜமாத்தார்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கோரிக்கையை ஏற்று சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கோபாலப்பட்டிணம் மையத்தாங்கரை சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்ட ST.ராமச்சந்திரன் MLA இன்று 02/08/2023 மாலை 4.00 மணியளவில் வருகை தர உள்ளார். ஆகவே கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி  கேட்டுக்கொள்கின்றோம். 

மேலும் பொதுநல அமைப்புகள், சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் ஊருக்கு தேவையான கோரிக்கைகளை மனுவாக எழுதி M.L.A விடம் வழங்கும்படி GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments