கோட்டைப்பட்டினத்தில் மழை நீர் சேகரிப்பு குழு மூலமாக தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது
கோட்டைப்பட்டினத்தில் மழை நீர் சேகரிப்பு குழு மூலமாக தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோட்டைப்பட்டினத்தில்   மழை நீர் சேகரிப்பு குழு மூலமாக தன்னார்வ இளைஞர்கள் சார்பாக‌ 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கோட்டைப்பட்டினம் 
சின்ன பள்ளி குளம் ஓரமாக 10 அடி உயரம் உள்ள 2 ஆல மரக்கன்றுகள்‌ தன்னார்வ இளைஞர்கள் மூலமாக நடப்பட்டது.

இதில் ஊர் தன்னார்வ இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டனர்.

ஒரு சில ஊர்களில் உள்ள இளைஞர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் இந்த காலகட்டத்தில் ஊர் நலனை கருத்தில் கொண்டு  சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட செயல்படும் கோட்டைப்பட்டிணம் 
மழைநீர் சேகரிப்பு குழுமம்  மற்றும் ஊர் தன்னார்வ இளைஞர்களுக்கு GPM மீடியா சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments