எர்ணாகுளம் ⇋ வேளாங்கண்ணி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கூடுதலாக உட்பட 12 இடங்களில் நின்று செல்வதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
கேரளாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்காவுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களின் வசதிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக வாரந்திர சிறப்பு ரயிலாக இயங்கி வருகிறது
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் வண்டி எண் 16361 & 16362 ஐ நிரந்தர சேவையாக தெற்கு ரயில்வே மாற்றியது.
இந்த ரயில் 28/08/2023 முதல் 18/09/2023 வரை 16361 & 16362 என்ற எண்ணில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நிரந்தர சேவையாகவும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 06035 & 06036 என்ற எண்ணில் சிறப்பு ரயிலாகவும் இயக்கும்.
25/09/2023 முதல் வாரமிருமுறை நிரந்தர சேவையாக இயங்கும். எர்ணாகுளம்
ரயில் நிரந்தர சேவையாக மாற்றப்படுவது மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், திருவாரூர் - காரைக்குடி பாதையில் இந்த இரயில் ஏற்கனவே நின்று சென்ற நிறுத்தங்களான அதிராம்பட்டிணம் மற்றும் பேராவூரணி நிறுத்தங்கள் நீக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்தது இருந்தது
இந்நிலையில் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயிலுக்கு சிறப்பு ரயில் போது நீக்கப்பட 12 நிறுத்தங்களுக்கு நிரந்தர ரயிலுக்கு நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும்
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் இருமுறை (BI - Weekly) ரயிலாக செப்டம்பர் 25 முதல் இயக்கப்படுகிறது
வண்டி எண் : 06035/36 வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் (Weekly)
26-08-2023 2-09-2023 9-09-2023 16-09-2023 23-09-2023 ஆகிய ஐந்து நாட்களில் சனிக்கிழமைகளில் வண்டி எண் 06035 /06036 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலாகவும் இயங்கும்.
வண்டி எண் : 16361/62 வாரம் ஒருமுறை நிரந்தர ரயில் (Weekly)
வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு ரயில் நிரந்தர வாரமிருமுறை சேவையாக இயக்கப்படுவதற்கு முன்பாக எதிர்வரும் 28-08-2023, 04-09-2023,11-09-2023 18-09-2023 ஆகிய நான்கு திங்கள்கிழமைகளில் வாராந்திர விரைவு ரயில் சேவைகளாக இயங்கும்.
வண்டி எண் : 16361/62 வாரம் இருமுறை நிரந்தர ரயில் (BI - Weekly)
வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் 25-09-2023 முதல் வழக்கமான நிரந்தர வாரமிருமுறை விரைவு ரயில் சேவைகளாக இயங்கிட உள்ளது.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (வண்டி எண்:16361)
இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை & திங்கட்கிழமை பகல் 1.00 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை & செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
வேளாங்கண்ணி- எர்ணாகுளம் (வண்டி எண் : 16312)
மறுமார்க்கத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை & செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை & புதன்கிழமை பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
இனி எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயில் எங்கெங்கு நின்று செல்லும்?
எர்ணாகுளம்
கோட்டையம்,
செங்கனாசேரி,
திர்வல்லா,
செங்கனூர்,
மவெலிகரா,
காயங்குளம்,
கருநாகப்பள்ளி ,
சாஸ்தன்கோட்டா,
கொல்லம்,
குந்தரா,
கொட்டாரகர,
அவனீஸ்வரம்
புணலூர்,
தென்மலை,
செங்கோட்டை,
தென்காசி
கடையநல்லூர்,
சங்கரன்கோவில்,
ராஜபாளையம்,
சிவகாசி,
விருதுநகர்,
அருப்புக்கோட்டை,
மானாமதுரை,
காரைக்குடி,
அறந்தாங்கி,
பேராவூரணி,
பட்டுக்கோட்டை,,
அதிராம்பட்டினம்,
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர்,
நாகப்பட்டினம்,
வேளாங்கண்ணி
ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிகளின் எண்ணிக்கை:
ஸ்லீப்பர்: 7
3 ஏ/சி: 2
2 ஏ/சி:1
பொது: 4
என மொத்தம் 14 பெட்டிகளோடு இயக்கப்படும்.
வாரம் இருமுறை ரயிலுக்கான
முன்பதிவு 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது
எர்ணாகுளம் - வேளாங்கன்னி ரயிலை, நாள்தோறும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.