ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 154.84 கோடியில் நவீன கட்டிடம் - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்



 


ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.154.84 கோடியில் கட்டப்பட்ட நவீன கட்டிடத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.




 ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.154.84 கோடியில் கட்டப்பட்ட நவீன கட்டிடத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

நவீன வசதிகளுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.154.84 கோடியில் 500 படுக்கைகளுடன் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய நவீன ஆஸ்பத்திரி கட்டப்பட்டு உள்ளது. இதன் தொடக்கவிழா கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

 நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், ராம.கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் புதிய ஆஸ்பத்திரியில் மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்து மருத்துவ பிரிவுகளை பார்வையிட்டனர். 

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராமநாதபுரம் உள்பட 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனையொட்டி இந்த புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 மாவட்டங்களில் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. 

 தலைக்காய சிகிச்சை பிரிவு

 ராமநாதபுரத்தில் 10 ஆபரேசன் தியேட்டர்கள், நவீன லேப் வசதி, பிணவறை, பயிற்சி டாக்டர்கள் தங்கும் விடுதி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஆர்த்தோ பிரிவு, பொது மருத்துவ பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த வங்கி, பிசியோதெரபி சிகிச்சை உள்பட அனைத்து சிகிச்சை பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பரமக்குடியில் ரூ.57 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் இதுவரை ரூ.7 கோடியே 39 லட்சத்தில் 29 துணை சுகாதார கட்டிடங்கள், ரூ.5 கோடி 43 லட்சத்தில் 16 ஆரம்ப சுகாதார கட்டிடங்கள், ரூ.1 கோடியில் துணை செவிலியர் பயிற்சி கட்டிடம், ரூ.5 கோடியே 26 லட்சத்தில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் சிகிச்சை பிரிவு கட்டிடம், 3 நலவாழ்வு மைய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. தலைக்காய சிகிச்சை பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார். 

 முதன்மை மாநிலம் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசுகையில், முதல்-அமைச்சரின் தலைமையில் மருத்துவத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது என பேசினார். விழாவில் மருத்துவகல்வி துணை இயக்குனர் செந்தில்குமார், ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி டீன் செந்தில்குமார், பயிற்சி சப்-கலெக்டர் சிவானந்தம், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம், மருத்துவ கண்காணிப்பாளர் மலர்வண்ணன், கவுன்சிலர் காயத்ரி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, யூனியன் தலைவர்கள்(ராமநாதபுரம்) பிரபாகரன், (திருப்புல்லாணி) புல்லாணி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் பகவத்சிங் சேதுபதி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ஜகாங்கீர், துணை அமைப்பாளர் முகமது அசாருதீன், விவசாய அணி துணை அமைப்பாளர் துரை, சிறுபான்மை அணி துணை தலைவர் செய்யது இபுராகிம், நகர் அமைப்பாளர் நாகூர்கனி, தொண்டரணி அமைப்பாளர் பி.டி.ராஜா, முன்னாள் கவுன்சிலர் வெள்ளா அப்பாஸ்கனி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மண்டபம் சம்பத்ராஜா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன், மாவட்ட பிரதிநிதி குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments