போலி ஐ.ஆர்.சி.டி.சி., செயலி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை




ரயில்வே டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவை களுக்கு பயன்படுத்தப்படும், 'ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்' எனும் மொபைல் போன் செயலியை போலியாக உருவாக்கி மோசடி நடக்கிறது' என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய் குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மோசடி நபர்கள், 'வாட்ஸா ப் மற்றும், டெலிகிராம்' செயலிகள் வாயிலாக, உங்கள் மொபைல் போன் எண்ணிற்கு, குறுஞ்செய்தி யுடன், 'லிங்க்' ஒன்றை அனுப்புவர்.

அதை 'கிளிக்' செய்தால், ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் எனும், 'ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்' செயலி பதிவிறக்கம் ஆகும்.

நீங்கள் அந்த செயலி உண்மையானது என, நம்பி, ரயில்வே டிக்கெட் முன் பதிவு உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்தலாம்.

அப்போது, உங்கள் 'டிஜிட்டல் வாலட் மற்றும் ஜி பே, போன் பே' உள்ளிட்டவைகளுடன் இணைக்கப்பட்ட, யு.பி.ஐ., விபரங்கள் மற்றும் 'கிரெடிட், டெபிட் கார்டு' வாயிலாக பணம் செலுத்த அனுமதி கோரப்படலாம். உங்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் இருக்கும் தகவல்களும் சேகரிக்கப்படலாம்.

அவ்வாறு யாருக்காவது நடந்து இருந்தால், உடனடியாக, கட்டணமில்லா உதவி எண், 1930க்கு தொடர்பு கொள்ளுங்கள். ஏனென்றால், மர்ம நபர்கள், ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட் செயலியை போலியாக உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோசடி குறித்து, www.cybercrime.gov.in மற்றும் care@irctc.co.in என்ற இணையதளத்திற்கும் புகார் தெரிவியுங்கள்.

மர்ம நபர்களிடம் சிக்காமல் இருக்க, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் அதிகாரப்பூர்வமான இணையதளமான, www.irctc.co.inல் பட்டியலிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள்.

மோசடி நபர்களிடம் சிக்காமல் இருக்க, 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் ஐ.ஓ.எஸ்., பயனாளர்களுக்கான 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' போன்ற அங்கீகரிக்கப்பட்டவைகளில் இருந்து மட்டும், ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

தள்ளுபடிகள் குறித்து வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்

தெரியாத எண்களில் இருந்து அனுப்பப்படும் செய்தியில் வரும் அந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம்

அங்கீகரிக்கப்படாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தடுக்க, உங்கள் மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களில் உள்ள, செட்டிங்சில் முடக்கி வைக்கவும்

எவரிடமும், ஓ.டி.பி., பின் நம்பர், பாஸ்வோர்டு மற்றும் வங்கி விபரங்களை பகிர வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments