அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை (ஆர்.ஆர்.) கிராமச் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்ய வேண்டி மனு அளித்த ST.ராமச்சந்திரன் MLA கோரிக்கை!அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறை (ஆர்.ஆர்.) கிராமச் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்ய வேண்டிய சாலைகள் குறித்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ வேலு அவர்களை சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கோரிக்கை‌ அளித்தார்.

சென்னையில் நேற்று 30/08/2023 தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களை நேரில் சந்தித்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் M.L.A அவர்கள் நெடுஞ்சாலைத்துறை (ஆர்.ஆர்.) கிராமச் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்ய வேண்டிய சாலைகள் குறித்தும்,  ஒக்கூர்-தீயத்தூர் முக்கிய சாலையை அகலப்படுத்திட வேண்டுமென்பது உட்பட அறந்தாங்கி ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகாவில் உள்ள சாலை பணிகளை வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்.
ஆவுடையார்கோவில் தாலுகா

மணமேல்குடி தாலுகா

அறந்தாங்கி தாலுகா


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments