2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு புதுக்கோட்டை முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலைக்காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக வரவேற்கப்படுகிறது.

இப்பணியிடங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 01.07.2023 அன்று 47 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரர்கள் மேற்படி பணியிடங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்படி பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியது குறித்த முழுவிவரங்களை மேற்காணும் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை அறிந்து விண்ணப்பித்து பயன்டையலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments