‘ஆன்லைன் டிரேடிங்' மூலம் இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி. அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மகன் சஞ்சய் (வயது 23). இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் மருந்தாளுனர் படிப்பு படித்து வந்தார்.
இதே கல்லூரியில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த வைரமுத்து பாலாஜி (23) என்பவரும் மருந்தாளுனராக படித்து வருகிறார். இதற்கிடையில் சஞ்சய், தான் ‘ஆன்லைன் டிரேடிங்' தொழில் செய்து வருவதாகவும், தன்னிடம் முதலீடு செய்தால் 40 நாட்களுக்குள் கொடுக்கும் பணத்துக்கு இரட்டிப்பு பணம் கொடுப்பதாகவும் சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரூ.49 லட்சம்
இதை உண்மை என நம்பி வைரமுத்து பாலாஜி, பெற்றோரிடமும், தனக்கு தெரிந்தவர்களிடம் பணத்தை வாங்கி மொத்தம் ரூ.49 லட்சத்து 10 ஆயிரத்தை சஞ்சயிடம் கடந்த ஆண்டு வழங்கி உள்ளார். 40 நாட்களுக்கு பின்னர் வைரமுத்து பாலாஜி தான் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக கொடுக்கும்படி சஞ்சயிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர், வைரமுத்து பாலாஜியிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைரமுத்து பாலாஜி, கடந்த மாதம் 28-ந்தேதி இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.
கைது
அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் சஞ்சயை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வைரமுத்து பாலாஜியை போல் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பல கோடி ரூபாய் பெற்று சஞ்சய் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சஞ்சயை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவர் ஒருவர், சக மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்திருக்கும் சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.