கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குளக்கரையில் பனைவிதைகள் நட்ட மாணவர்கள்




புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர். மேலும் பனை மரங்கள் வெட்டி அகற்றுவதையும் தடுத்து வருகின்றனர். அதேபோல தற்போது கிராமங்கள் தோறும் ஏரி, குளக்கரைகளிலும் பொது வெளியிலும் பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர். இதேபோல குளமங்கலம் வடக்கு கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து விடுமுறை நாளில் சேகரித்த பனை விதைகளை குளக்கரையில் நடவு செய்தனர். இதே போல ஒவ்வொரு விடுமுறை நாளிலும் பனை விதைகள் நடுவதாக கூறுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments