25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் டூவீலர்.. புதுக்கோட்டை மாவட்ட உலமாக்கள் பயன் என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் தற்போது உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலும் விளக்கத்தை புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் அமீர் பாஷா விளக்குகிறார்.

அவர் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உலமா மற்றும் பணியாளர் நல வாரியம் இயங்கி வருகிறது. மேலும் வகுப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களில் 5 ஆண்டுகள் குறையாமல் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு அதாவது இமாம், மோதினார் போன்ற வகுப்பை சார்ந்தவர்களுக்கும் பள்ளிவாசல்களில் பணி புரிபவர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

உலமாக்களுக்கு பைக் வாங்க மானியம்
45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த மானியத்தை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தினை அளிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேலும் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை அளிக்கும் போது விண்ணப்பதாரரின் முகவரி, ஆதார், வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், அத்தோடு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் இடம் 5 ஆண்டுகள் பணிபுரிந்ததற்கான சான்றுடன், இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான ரசீதுடன் விண்ணப்பத்தினை வழங்கினால் உடனடியாக 25 ஆயிரம் மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே இதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments