புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியில் கட்டுமாவடி டூ அரசங்கரை வரை பனை விதை நடும் நெடும் பணிக்காக கள ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியில் கட்டுமாவடி டூ அரசங்கரை வரை  பனை விதை நடும் நெடும் பணிக்காக கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் நண்பர் ராஜவேலு,  பிரபாகரன், நீடாமங்கலம் ஜானகிராமன்,  மணமேல்குடி நடேஷ் குமார்,  ஆகியோர்களுடன் கட்டுமாவடி முதல் அரசாங்கரை வரை கள ஆய்வு மேற்கொண்டனர் 
சென்னை முதல் கன்னியாகுமரி வரை  ஒரு‌ கோடி‌ பனை‌ விதைகள்‌ நடும் நெடும் பணியில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தங்களையும் இணைத்து கொண்டு நற்பணியில் ஈடுபட அழைக்கிறோம்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 43 கிலோ  மீட்டர் தொலைவில் கட்டுமாவடி முதல் அரசாங்கரை வரை வரும் 24 ஆம் தேதி நிகழ்ச்சிகள் தொடங்கும்   இரண்டு‌ இடங்களில் தொடங்கபடுகிறது. 

1.மணமேல்குடி ஒன்றியம் ஆவுடையார்பட்டினம் - அம்மாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை...

2 ஆவுடையார் கோவில்ஒன்றியம் சேமங்கோட்டை கோபாலாபட்டிணம் நாட்டாணிபுரசக்குடி &பொன்னாமங்களம் ஊராட்சிகள் கிழக்கு கடற்கரை சாலை அருகில்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்,  மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் துணைச் செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணைப் பெருந்தலைவர், பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், புன்னகைஅறக்கட்டளை நண்பர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஊர் தலைவர்கள், பொது மக்கள்  போன்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்...

அனைவரும் வாரீர்... ஆதரவு தாரீர்...

பனை விதைப்போம் பயன்பெறுவோம்...   அடுத்ததலைமுறைக்காக இணைந்து அழைப்பது ஆ.சே. கலைபிரபு நிறுவனத் தலைவர் புன்னகை அறக்கட்டளை  அமரடக்கி,  ஆவுடை யூனுஸ்ஜசீனியார், ஒருங்கிணைப்பாளர் சீனியார் அன்பறிவகம் மணமேல்க்குடி திமுக சுற்றுச்சூழல்அணினர்கள் புதுக்கோட்டை மாவட்டம்

#Panaividhaippom
1 Crore Palm Planting
Chennai to Kanyakumari
——————————————-
🌴1 Crore Palm Seeds 
🌴1 Lakh Volunteers 
🌴Tiruvallur to Kanyakumari
🌴 1076 kms
🌴24 Sep, Sun | 8.30 am - 11.45 am

Please block ANY beach stretch you wish to plant palm seeds by registering the form
https://udhavi.app/panai/ 
 Pudukkottai district coordinator: A.S.#KALAIPRABHU
&
#ஆவுடையூனுஸ்சீனியார்
-8838536394

-----Form fill----லிங் சென்று பதிவு செய்க🙏🌴🌴🌴🌴

1. Name .....
2. Mobile number (what'sapp)
3. Address....
4. Gmail id......
5. Volunteers are NGO, SCHOOL, COLLEGE, OTHERS.......  ✊
6. Bring My own hand gloves
7. ....
*8. Pudukkottai
9. Area.....

கடல் மட்டம் உயர்வு நம் கண் முன்னே!

கடந்த ஒரு வார காலமாக கடல் கரை ஓரங்களில் பயணம் செய்து வருகிறோம் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்காக. அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உருகும் பனிப்பாறைகளால் கடல் மட்டம் உயரப்போகுது, 2100-ம் ஆண்டில் கடலோர நகரங்கள் பல கடல் நீரில் மூழ்கும் என அடிக்கடி செய்திகளில் படித்ததுண்டு. தொலைக்காட்சிகளிலும் பார்த்ததுண்டு, 2100 -ல் தானே மூழ்கும் அதனாலென்ன, என இச்செய்தியை அலட்சியப்படுத்தி கடந்து செல்வோர்கள் நம்மில் பலர் உண்டு. நமக்கருகில் உள்ள நாகை, வேளாங்கன்னி, கோடியக்கரை, மல்லிப்பட்டினம், கோடியக்கரை மணல்மேடு உள்ளிட்ட பகுதி கடற்கரையை பார்வையிட்ட போது அப்பகுதியில் பல தலைமுறைகளாக வசிப்பவர்கள் கூறியது இல்லை, இல்லை கதறியது, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்த கடல் இப்ப இங்க இருக்கு, பூமி சூடாகி பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் எங்கள் வசிப்பிடங்களுக்கு வந்துட்டதா சொல்றாங்க, நாங்களெல்லாம் வாழ்ந்து முடிச்சிட்டோம், எங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் நிலமையை நெனச்சா தான் பயமா இருக்கு என்றவர்களை கண்டோம். கடலோரங்களில் பனை மரங்கள் உள்ள இடங்களில் மண் பல ஆண்டுகளாக சேர்ந்து, சேர்ந்து மேடான பகுதியாக காட்சியளிப்பதையும் கண்டோம். ஏராளமான பொருட்செலவில் பாறைகளை பெயர்த்து வந்து கடற்கரைக்கு செல்லும் பாதைகளை அடைத்து வைத்துள்ளது அரசு.  கருங்கல்லுக்கு மாற்றாக கிழக்கு கடற்கரை முழுவதும் பனையை வளர்த்தால் உயிர் வேலியாக இருந்து பனை பல்லுயிர்களையும் காக்கும் என்பதில் ஐயமில்லை.

மு.ராஜவேலு,
நிறுவனர்,
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு,
19.09.2023.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments