தெற்கு செல்லும் அனைத்து ரயில்களும் இந்த சந்திப்பில் நிற்கின்றன.. ஏன் தெரியுமா..?
பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ரயிலில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்  நிலையம் ஒன்று உள்ளது. வடக்கே இருந்து தெற்கே வரும் அனைத்து ரயில்களும் இந்த ரயில் நிலையத்தில் மட்டும்  போகுமாம். அது ஏன் எதற்கு இந்த ரயில் நிலையத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று தான் இப்பொது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

நீங்கள் டெல்லி, லக்னோ, கான்பூர், போபால், ஜான்சி போன்ற நிலையங்களில் இருந்து பெங்களூரு , சென்னை , திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்குச் செல்கிறீர்கள் என்றால், மகாராஷ்டிராவில் உள்ள பல்ஹர்ஷா என்ற ஒரு சிறிய நகரத்தில் ரயில்கள் நிற்பதை நிச்சயம் கவனிக்க முடியும். பெரிய நகர ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்பது தெரியும் ஆனால் இந்த சிறிய நகரில் ஏன் நிற்கிறது?

அதுவும் பெரிய வசதிகளோ உளவு விடுதிகளோ கூட இந்த ரயில் நிலையத்தில் இருப்பதில்லை. ஆனால் இன்னும். அனைத்து தெற்கு ரயில்களும் இங்கு நிற்கின்றன. ஏன் அப்படி? கேள்வி எளிமையானது என்றாலும், அதன் பதில் மிகவும் சுவாரஸ்யமானது. ஆம், இதைப் படித்த பிறகு, நீங்களும் அதை தான் சொல்வீர்கள்.அது மட்டும் இல்லாது இந்த ரயில் நிலையம் பார்ப்பதற்கே கொஞ்சம் மற்ற நிலையங்களை விட வித்தியாசமாக இருக்கும்.

சரி முதலில்  பல்லார்ஷாவின் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாம் இது 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, சிர்பூரின் (இப்போது தெலுங்கானாவில் உள்ளது) மன்னர் சூரஜா பல்லால் சிங் இறந்த பிறகு , அவரது மகன் கண்டக்ய பல்லலா அரியணையை ஏற்றார், ஆனால் அவருக்கு தனது தலைநகர் பிடிக்கவில்லை. புவியியல், பொருளாதார மற்றும் நிதிக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, புதிய தலைநகரை உருவாக்க முடிவு செய்தார்.

400 கிலோமீட்டர் தொலைவில் வார்தா நதிக்கு அருகில் ஒரு இடத்தைத் தேடி, அதுவும் தனது தந்தையின் பெயரில் ஒரு புதிய நகரத்தை நிறுவ முடிவு செய்தார். புதிய தலைநகரில் அவர் ஒரு கோட்டையைக் கட்டினார் மற்றும் நகரத்திற்கு பல்லராசா என்று பெயரிட்டார் . அவர் தனது முழு ஆட்சியையும் இங்கிருந்து தொடர்ந்தார், பின்னர் மற்றொரு கோட்டையான சந்தர்பூர் கோட்டையை வடக்கு நோக்கி கட்டினார்.


வெள்ளத்தின் சீற்றம் கோட்டையின் மீது படாதவாறு வர்தா நதியின் கிழக்கு முனையில் உயரமான மதில் சுவர்கள் கட்டி கோட்டையின் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று, கோட்டை சிதிலமடைந்துவிட்டாலும், உயர்ந்த சுவர்கள் மற்றும் தூண்கள் இன்னும் இங்கு உள்ளன.

மன்னர் கண்டக்ய பல்லாலாவின் வர்த்தகத்தை மேம்படுத்தியதால், தொலைதூரத்தில் இருந்து மக்கள் இங்கு வந்து வியாபாரம் செய்து வந்தனர். பின்னர் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து குடியேறினர். மராத்தி மக்களைத் தவிர, இங்கு வசிக்கும் மக்கள் அடிப்படையில் தென்னிந்தியா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக மாறினர்.

அவர்களை விடவும் ஏற்றிச்செல்லவும் இங்கு ரயில் நிலையமும் நிறுத்தமும் உருவாக்கப்பட்டது. இங்கு நாள் முழுவதும் 175 க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன. இங்கு கிராந்தி போபால் எக்ஸ்பிரஸ் (07619) என்ற  ஒரே ஒரு ரயில் மட்டுமே  ஒரு நிமிடம் மட்டுமே நிற்கிறது. மீதமுள்ள அனைத்து ரயில்களும் குறைந்தது 10 நிமிடங்களுக்கு நிற்கின்றன. இதில் 10 ரயில்கள் 20 நிமிடம் நின்று செல்லும்.  அதுதான் . 5 நிமிடங்களுக்கு மூன்று ரயில்கள் நிற்கின்றன.சரி ஏன் இங்கு மட்டும் இவ்வளவு நேரம் நிற்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.  பல்ஹர்ஷா என்பது ரயில் தெற்கு நோக்கி எந்த திசையில் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்படும் சந்திப்பு ஆகும் . ஆம், இங்கிருந்து ஒரு பாதை செகந்திராபாத்தையும் மற்றொன்று சென்னையையும் இணைக்கிறது. அதே போல அனைத்து TTEகள், காவலர்கள், லோகோ பைலட்டுகள் 8 மணிநேர ஷிப்ட் மற்றும் இந்த ஷிப்ட் பல்ஹர்ஷாவில் முடிவடைகிறது. அதனால் ஷிபிட் மாறும் இடமும் இது தான்.


வடக்கில் இருந்து தெற்கு அல்லது எதிர் திசையில் செல்லும் போது இடையில் ரயில்களின் என்ஜின்கள் இங்கே சரிபார்க்கப்படுகின்றன. பிரேக்குகளையும் ஆய்வு செய்கிறது. அதனால்தான் ரயில்வே மொழியில் பல்லார்ஷா நிறுத்தம் தொழில்நுட்ப நிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது . அது மட்டும் இல்லாமல்  உண்மையில் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.


பல்ஹர்ஷா நாக்பூருக்கும் காசிபேட்டிற்கும் இடையில் அமைந்துள்ளது. நாக்பூர் இந்தியாவின் புவியியல் மையமாகும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எந்த திசையில் இருந்து வந்தாலும் நாக்பூர் மையத்தில் விழும். நாக்பூர் ஏற்கனவே மிகவும் பரபரப்பான ரயில் நிலையமாக இருப்பதால், அங்கிருந்து ரயில்களை சுத்தம் செய்வது, தண்ணீர் நிரப்புவது போன்ற வேலைகள் சாத்தியமில்லை, எனவே இந்திய ரயில்வே தெற்கு நோக்கி  சிறிது தூரத்தில் உள்ள பல்லார்ஷா நிலையத்தை இந்த பணிக்குத் தேர்ந்தெடுத்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments