அறந்தாங்கியில் 4 நகைகடைகளின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட நகைகடைகளும் அதிகம் உள்ளது. இங்குள்ள நகை கடைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூட்டப்பட்டிருந்தன. இன்று காலை அந்த கடைகளை திறக்க ஊழியர்கள் வந்தனர்.அப்போது ஒரு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த நகைகள் வைத்திருந்த பெட்டிகள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.அதே வேளையில் அருகில் இருந்த சந்து பகுதியில் நகைக்கடை, அடகு கடை, நகை பட்டறைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. இங்கும் நகைகள் கொள்ளை போனது. 

மர்ம நபர்கள் நள்ளிரவு ஆட்கள் நடமட்டம் இல்லாத நேரத்தில் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த சம்பவங்களில் 2 1/2 கிலோ வெள்ளி, தங்க நகைகள், பொருட்கள் கொள்ளை போயின. அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.அடுத்தடுத்து நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் ஏராளமான நகை வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் திரண்டனர். பாதிக்கப்பட்ட நகை கடைக்காரர்கள் கூறும் போது இரவு நேரங்களில் இப்பகுதியிலும் போலீசார் ரோந்து பணி வர வேண்டும் என்றனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments