நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டம் இறுதி கட்டத்தில்- "டென்டர்" கோரப்பட்டு உள்ளது
மன்னார்குடி , தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம் சாலைகள் இணைக்கும் வகையில் பிரம்மாண்டமான பாலமாக கட்ட  திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான அளவுககள், தூண்கள் விவரங்கள் ஏலப்புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீடாமங்கலத்தில் ெரயில்நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் பலமுறை ெரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நெடுஞ்சாலை பயணிகளின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு நிரந்தர தீர்வு மாற்றுவழி பாதைகள் தான் என கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சுற்றுச்சாலை அமைக்க முதலில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை மூலம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. பின்னர் நான்குவழிச்சாலைத்திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த போது, அந்த திட்டத்தில் நீடாமங்கலம் பகுதியும் இணைக்கப்பட்டு சுற்றுச்சாலை திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நான்கு வழிச்சாலை திட்டபணிகள் தொடங்கி நடந்து வந்தது. திருச்சி முதல் தஞ்சாவூர் வரை முதலில் பணிகள் நிறைவடைந்தது. ஆனால் தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான பணிகள் ஏதோ காரணத்தால் தேக்கம் ஏற்பட்டது. அந்த திட்டம் நிதி பற்றாக்குறை காரணமாக இருவழிச்சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டது.

அந்த பணியும் முழுவதுமாக நிறைவேற்றபடாமல் இருந்தது. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நீடாமங்கலம் ெரயில்வே மேம்பாலம் திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டு, மண்பரிசோதனை செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறையால் திட்டவரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ெரயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறையால் ஆய்வும் நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. நீடாமங்கலம் நகரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நீடாமங்கலம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு தினந்தோறும் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகின்றன.

நீடாமங்கம் வழியாக காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரெயிலும், சென்னை, கோவை, திருப்பதி, எர்ணாகுளம், வாஸ்கோடகாமா, ஜோத்பூர் ஆகிய பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்று வருகின்றன.

அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்

நீடாமங்கலம் வழியாக சரக்கு ெரயில்கள் மூலம் நெல் மூட்டைகள் அடிக்கடி ஏற்றி செல்லப்படுகிறது. ரெயில்கள் வந்து செல்லும் போது நீடாமங்கலம் ரெயில் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.

இதன் காரணமாக சாலையின் இருபக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று வழியாக புறவழிச்சாலைத்திட்டம் கொண்டுவர வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments