21 ஆண்டுகளுக்கு பிறகு அகஸ்தியன்பள்ளியில் இருந்து சரக்கு ரெயில் சேவை தொடக்கம் காஞ்சீபுரத்துக்கு அரவைக்காக நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டன
21 ஆண்டுகளுக்கு பிறகு அகஸ்தியன்பள்ளியில் இருந்து சரக்கு ரெயில் சேவை நேற்று தொடங்கியது. முதல் நாளில் காஞ்சீபுரத்துக்கு அரவைக்காக நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

பயணிகள் ரெயில் இயக்கம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் இருந்து கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையில் சரக்கு ரெயில் போக்குவரத்து நடந்து வந்தது. பின்னர் சரக்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மீட்டர் கேஜ் ெரயில்பாதை அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் பயணிகள் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

21 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரெயில் சேவை

இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு அகஸ்தியன்பள்ளியில் இருந்து சரக்கு ரெயில் சேவை நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி ெரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

முதன்மை இயக்கவியல் மேலாளர் ஸ்ரீகுமார், வணிக மேலாளர் செந்தில்குமார், இயக்கவியல் முதுநிலை மேலாளர் ரதிபிரியா, ெரயில்வே செய்திமக்கள் தொடர்பு அலுவலர் வினோத் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் வேதரத்தினம், வேதாரண்யம் லாரி உரிமையாளர் சங்க தலைவர் கருணாநிதி, செயலாளர் கோவிந்தசாமி, சிறு, குறு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் புகழேந்தி, செயலாளர் செந்தில், பொருளாளர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டன

முதல் நாளாக நேற்று அகஸ்தியன்பள்ளியில் இருந்து காஞ்சீபுரத்துக்கு அரவைக்காக 25 ஆயிரம் நெல்மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

அகஸ்தியன்பள்ளியில் இருந்து விரைவில் உப்பு ஏற்றுமதி தொடங்கப்படும் என ெரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments