திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு




காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே தீபாவளி பண்டிகை முன்னிட்டு  சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்ட செய்தி:

வண்டி எண் : 06070  திருநெல்வேலி  -  சென்னை எழும்பூர் 

வண்டி எண் : 06070 திருநெல்வேலியில் இருந்து 09-11-2023, 16-11-2023,23-11-2023 ஆகிய மூன்று நாட்களில் (வியாழக்கிழமை) மாலை 6-45 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் சென்னை எழும்பூர் சென்றடையும் 

வண்டி எண் : 06069
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ‌‌

மறுமாா்கத்தில் வண்டி எண் : 06069 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி -  இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் 10-11-2023, 17-11-2023, 24-11-2023 ஆகிய மூன்று நாட்கள் வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3-00 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் 

சிறப்பு விரைவு ரயில் எங்கே எங்கே நின்று செல்லும் ??

திருநெல்வேலி சந்திப்பு,
கோவில்பட்டி,
சாத்தூர்,
விருதுநகர் சந்திப்பு ,
அருப்புக்கோட்டை ,
மானாமதுரை சந்திப்பு,
சிவகங்கை,
காரைக்குடி சந்திப்பு,
அறந்தாங்கி,
பேராவூரணி,
பட்டுக்கோட்டை,
அதிராம்பட்டினம்,
முத்துப்பேட்டை,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
மயிலாடுதுறை சந்திப்பு,
சீர்காழி,
சிதம்பரம்,
கடலூர் துறைமுகம் சந்திப்பு,
விழுப்புரம் சந்திப்பு,
செங்கல்பட்டு சந்திப்பு,
தாம்பரம்,
சென்னை எழும்பூர் 

ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

பெட்டிகள் 

இந்த சிறப்பு விரைவு ரயிலில்

AC Two Tier - 1
AC Three Tier - 6
SL Class - 9
GS (UR) - 4
சரக்கு பெட்டி - 1
மாற்றுத்திறனாளிகள் பெட்டி - 1 என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்

முன்பதிவு : 

இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

PC Credit: Surya 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments