KSR பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக செல்லும் மைசூர் -‌ மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி, சிதம்பரம் வழியாக கடலூர துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல்




மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் வரை நீட்டிப்பு செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு

மைசூர் ரயில் நிலையத்தில் இருந்த KSR பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், வழியாக மயிலாடுதுறைக்கு இருமார்க்கங்களிலும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது 

மைசூர் - மயிலாடுதுறை

இந்த ரயில் மைசூரில் இருந்து தினமும் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்தடைகிறது. 

மயிலாடுதுறை - மைசூர் 
 
மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை இருந்து இந்த ரயில் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.35 மணிக்கு மைசூர் ரெயில் நிலையம் வந்தடைகிறது. .

இந்த ரயிலை இரு மார்க்கங்களிலும் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர் 

அதனை தொடர்ந்து,  ரெயில்வேயின் பரிந்துரைப்படி மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சீர்காழி சிதம்பரம் வழியாக கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்து இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் கொடுத்துள்ளது. 

நிறுத்தங்கள்

இந்த ரெயில் மயிலாடுதுறை- கடலூர் துறைமுகம் இடையே சீர்காழி சிதம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில்வே வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு கடலூர் மாவட்ட  பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments