‘பள்ளிகளிலேயே இனி ஆதார் பதிவு’ பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு




ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை சமீபத்தில் எழுதினார். அதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் படிக்கும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. ஊக்கத்தொகைகள் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு, மாணவர்களுக்கு வங்கி கணக்கு கட்டாயம் தேவை. அதேநேரம், வங்கி கணக்கு தொடங்க ஆதார் அட்டை அவசியம். இதனால், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 வரை படிக்கும் 1.25 கோடி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது அவசியமாகிறது. இதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் இருந்து 770 ஆதார் பதிவு கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தெரிவித்தது.இந்த நிலையில், ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து மாணவர்களும் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு, புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினை கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் மேற்கொள்ள அனுமதி அளித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கான ஆணையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments