சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் உற்சாக வரவேற்பு




திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF  எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு  கல்லிடைக்குறிச்சியில் உற்சாக வரவேற்பு அளித்தனர் 
 
திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக
சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை  இயக்கப்பட்டு வருகிறது 

வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் 
ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்  திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள்  செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்

இனி தாம்பரம் செங்கோட்டை அதி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு, 
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்),
மயிலாடுதுறை சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
முத்துப்பேட்டை,
பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி,
காரைக்குடி சந்திப்பு, 
அருப்புக்கோட்டை,
விருதுநகர் சந்திப்பு, 
திருநெல்வேலி சந்திப்பு,
சேரன்மகாதேவி,
கல்லிடைக்குறிச்சி,
அம்பாசமுத்திரம்,
பாவூர்சத்திரம்,
தென்காசி சந்திப்பு, 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

கல்லிடைக்குறிச்சியில் 

இந்நிலையில் வண்டி எண் 
20683 தாம்பரம் -  செங்கோட்டை 10-03-2024 முதல் 
மாறுமார்கத்தில்
20684  செங்கோட்டை - தாம்பரம் 11-03-2024 முதல்  கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஒற்றுமைக்கு பேர் பெற்ற இடம்.

இவ்வூரைச் சுற்றி சுமார் 70 ஆயிரம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தாம்பரம் செங்கோட்டை அதிவிரைவு ரயில் கல்லிடையில் நின்று செல்லும் வரவேற்பு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் பேராசிரியர் விஸ்வநாதன்
தலைவர் கவிஞர் உமர் பாரூக்
அறிமுக உரையாற்றினர்.
பேரூராட்சித் தலைவர் திருமதி பார்வதி
துணைத் தலைவர் திரு இசக்கி பாண்டியன்

பாஜக சேரை ஒன்றிய தலைவர் திரு சிவராமகிருஷ்ணன்
அம்பை ராம்ராஜ் பாண்டியன்
மதிமுக நகர செயலாளர் மசூது
பிரதிநிதி டிஎம் அப்துல் சமது
அஇஅதிமுக நகரக் கழகத்தினர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பாஜக தலைவர் திரு தயா சங்கர்
நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஞான திரவியம் எம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ரயில்வே மண்டல ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டிய ராஜா
விளக்கவுரை ஆற்றினார்.
இணைச் செயலாளர் ஜான் ஞானராஜ் கோரிக்கை உரையாற்றினார்.

இதில் அனைத்துக் கட்சி அங்கத்தினர்
ரயில் பயணிகள் நலச்சங்கத்தின்
பொருளாளர் சீதாராமன்
துணைத் தலைவர்களான: ஜவஹர்-மோகன்
இணைச் செயலாளர் டிஎம் அப்துல் சமது
துணைப் பொருளாளர்களான கேடிசி ஷரீப் சகஸ்ர நாமன்
ஆலோசகர் ஜான் பால்,
கௌரவ நிர்வாகி டாக்டர் பத்மநாபன்,
கேஎஸ் அப்துல் மஜீத்
வழக்கறிஞர் ஜோயல் ஹென்றி
ஒருங்கிணைப்பாளர் ஷாகித் மைதீன்
நிர்வாஙிகளான:
ஒளிமாலிக், கார்த்திக்,சாய் சுரேஷ், அனீஸ் பாத்திமா, ஷண்முகம்
ஆலோசகர் மும்பை அபுல் ஹசன் சார்பில் அவரது உறவினர்,
வழக்கறிஞர் கார்த்திக்,
மற்றும் அனைத்து சமுதாயத் தலைவர்கள்
வியாபாரிகள்
கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரசாக்,சங்க ஒளிப்பதிவாளர் தானிஷ்
செய்திருந்தார்.

சரியாக 05.15 மணிக்கு தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
அனைத்து கட்சியினரும் சேர்ந்து
என்ஜினுக்கு மாலை அணிவித்து,
கொடி அசைத்து வைத்து
லோகோ பைலட்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி சிறப்பு செய்தனர்.சுமார் இரண்டாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments