அதிராம்பட்டினம் டூ சென்னை அரசின் நேரடி AC பேருந்து சேவை.. தொடக்கம் இனி சென்னைக்கு வெறும் ரூ.490ல் ஏசி பேருந்தில் பயணிக்கலாம்.!




அதிரையிலிருந்து சென்னைக்கான நேரடி குளிர்சாதன அரசு பேருந்து சேவையை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் அதிரை மேற்கு நகர திமுக பொறுப்பாளர் S.H.அஸ்லம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினந்தோறும் அதிரையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த பேருந்து மன்னார்குடி, கும்பகோணம் வழியாக சென்னை கிளாம்பாக்கத்திற்கு காலை 4மணிக்கு சென்றடையும்.

குளிர்சாதன பேருந்தில் அமர்ந்து செல்லும் இருக்கை டிக்கெட் ரூ.490/- மற்றும் படுக்கை வசதியுடனான இருக்கைக்கு டிக்கெட் ரூ.750/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்தில் பயணிக்க விரும்புவர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்திக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments