திருச்சி - புதுக்கோட்டை - அறந்தாங்கி - மீமிசல் (SH - 26) சாலை திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை - அறந்தாங்கி நான்கு வழிச்சாலை யாக அகலப்படுத்தும் பணிகள் அமைச்சர் மெய்நாதன் அடிக்கல் நாட்டினார்




புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில், நெடுஞ் சாலைத்துறையின் சார்பில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பல்வேறு புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
பின்னர் சுற்றுச்சூழல்மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரி வித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக எண்ணற்ற வளர்ச் சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், கிராமப்புறங்களில் சாலை அமைத்தல், ஆழ்துளை கிணறு அமைத்தல், குடிநீர் தொட்டி கட்டுதல், கழிவறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுஞ் சாலைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கேப்பரை பகுதியில்,ரூ.38 கோடி மதிப்பீட்டில், புதுக்கோட்டை முதல் அறந்தாங்கி செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி மற்றும் திருவரங்குளம் பகுதியில், ரூ.5.48 கோடி மதிப்பீட்டில் புதுக்கோட்டை முதல் ஆவணம் செல்லும் சாலையில் உள்ள வலைவுகளை அகலப்படுத்தும் பணிமற்றும் வடகாடு பகுதியில், ரூ.7.77 கோடி மதிப்பீட்டில் புதுக்கோட்டை முதல் ஆவணம் செல்லும் சாலையில் உள்ள சந்திப்புகளை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் கொத்தமங்கலம் மையம் பகுதியில், ரூ.13.50 லட்சம்மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி உள்ளிட்ட புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.

இப்பணிகள் அனைத்தையும் தொடர்புடைய அலுவலர்கள் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அனைவரும் அறிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) வேல்ராஜ், உதவிக் கோட்டப் பொறியாளர் ரவிச்சந்திரன், வீரமணி, உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்; கலந்துகொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments