புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்களில் எழுத்தறிவு மதிப்பீடு நடைபெரும் 5 கற்றல் மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை திருமதி ராஜேஸ்வரி அவர்கள் பார்வை




மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட  30 மையங்களில் கற்போருக்கு மதிப்பீடு நடைபெற்றது.

மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 மையங்களில் 600 கற்போருக்கு மதிப்பீடு இன்று நடைபெற்றது.

இம் மதிப்பீட்டில் தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளராகவும் மற்றும் தன்னார்வலர்கள் அறை கண்காணிப்பாளராகவும் செயல்பட்டார்கள்.

தேர்வானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கற்போர் வசதிக்கேற்ப மையங்களிலும் இல்லங்களிலும் நேரடியாக மதிப்பீடு நடைபெற்றது. 

இந்நிகழ்வினை மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை மதிப்பிற்குரிய திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மேலஸ்தானம், மும்பாலை பட்டினம், பட்டங்காடு ,
கீழ மாந்தங்குடி, இடையாத்திமங்கலம் ஆகிய ஐந்து கற்றல் மையங்கள் பார்வையிட்டார்.

 மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் மதிப்புக்குரிய திருசெழியன் மற்றும் திருமதி இந்திராணி மணமேல்குடி வட்டார வள மைய  மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம்  ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன்  அங்கையர் கன்னி ஆகியோர் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட அனைத்து மையங்களையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் கற்போர்கள் அனைவரும் ஆர்வத்துடன்  கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments