கோட்டைப்பட்டினத்தில் புற்றுநோய் கண்டறியும் முகாம்




புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையமும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து புற்றுநோய் கண்டறியும் முகாம், ஊர்வலம் நடத்தினர். முகாமில் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு புற்றுநோய் பரிசோதனை நடத்தினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதைதொடர்ந்து மருத்துவர்கள் புற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments