சவுதி அரேபியாவின் தமாம் நகரில் பிப்ரவரி 5-ம் தேதி (05-02-2026) அன்று, தமிழகத்தின் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான பழனிபாபா அவர்களின் வரலாற்றைப் பேசும் ‘பழனிபாபா: தலைவனின் குரல்’ புத்தக அறிமுக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வழக்கறிஞரும் எழுத்தாளருமான சே.ஜெ. உமர்கயான் மற்றும் எழுத்தாளர் பழனிஷஹான் ஆகியோரது எழுத்தில் உருவான இப்புத்தகம், முன்னதாக குவைத் நாட்டில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமாம் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், சவுதி அரேபியாவின் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருங்கே திரண்டனர்.
இவ்விழாவில் சவுதி செந்தமிழ் பாசறை, மதராசி தமிழ் சங்கம், தமாம் தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஓட்டுநர்கள் நலச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்தியத் தூதரகப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், தனியார் நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் NRT (Non-Resident Tamils) அமைப்பின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் இப்புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது நூருல்லாஹ் அவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டு, அவரது சமூகப் பணிகளைப் பாராட்டி வாழ்த்து கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்றவர்கள் பேசுகையில், இளைய தலைமுறைக்குத் தலைவர்களின் தியாகத்தையும் வரலாற்றையும் கொண்டு சேர்ப்பதில் இப்புத்தகம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிவித்தனர்.
அயலக மண்ணில் தமிழையும், தமிழ் ஆளுமைகளையும் போற்றும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு அங்குள்ள தமிழ் மக்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.