மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் 2,302 பேரிடம் தபால் வாக்குப்பதிவு இன்று முதல் 3 நாட்கள் பெறப்படுகிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் 2,302 பேரிடம் தபால் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்கள் பெறப்படுகிறது.

தபால் வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வீடுகளில் இருந்தப்படி தபால் வாக்குப்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்குப்பதிவிற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தங்களுக்கு தபாலில் வாக்குப்பதிவு அளிக்க விருப்பம் தொடர்பாக படிவம் வினியோகிக்கப்பட்டு பெறப்பட்டது. இதையடுத்து 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்கள் பெறப்படுகிறது. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் பெறப்படுகிறது.

2,302 பேர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 206 பேரும், புதுக்கோட்டையில் 171 பேரும், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை தொகுதியில் 342 பேரும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கப்பட்ட திருமயம் தொகுதியில் 255 பேரும், ஆலங்குடி தொகுதியில் 181 பேரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 245 பேரும் என மொத்தம் 1,400 பேர் உள்ளனர்.

இதேபோல மாற்றுத்திறனாளிகளில் கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் 110 பேரும், விராலிமலையில் 286 பேரும், புதுக்கோட்டையில் 67 பேரும், திருமயத்தில் 183 பேரும், ஆலங்குடியில் 59 பேரும், அறந்தாங்கியில் 187 பேரும் என மொத்தம் 902 பேர் உள்ளனர். மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 2,302 பேர் உள்ளனர்.

வீடியோவில் பதிவு

மாவட்டத்தில் இந்த தபால் வாக்குகளை பெறுவதற்காக வாக்குப்பதிவு அலுவலர், உதவியாளர், நுண் பார்வையாளர், 1 போலீஸ்காரர், ஒரு வீடியோ பதிவு அலுவலர் என 5 பேர் பணியில் இருப்பார்கள். ஒருவரிடம் தபால் வாக்குப்பதிவு நடைபெறுவதை வீடியோவில் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments