தேர்தல் புறக்கணிப்பு
ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சிக்கோட்டை ஊராட்சி உள்ளது. பாச்சிக்கோட்டை காலனியில் சுமார் 200-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையை உடனே அகற்றக்கோரி அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு மனு அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த நார் தொழிற்சாலையை உடனடியாக அகற்ற வேண்டும். அகற்றப்படாத பட்சத்தில் தொழிற்சாலையை மூடும் வரை தாங்கள் குறிப்பிட்ட ஊராட்சி பகுதிக்கு எந்த அரசியல் கட்சியினரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்று ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் உள்ள பாச்சிக்கோட்டை ஆர்ச் முக்கத்தில் பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்லை புறக்கணிப்பதாக பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே காரில் அங்கு வந்த அமைச்சர் மெய்யநாதனிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டனர். மஞ்சுதொழிற்சாலையை இப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
பதாகை வைத்ததால் பரபரப்பு
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருக்கட்டளை ஊராட்சி, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திருமலை ராயசமுத்திரம் ஊராட்சி ஆகிய பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மாநகராட்சியானால் 100 நாள் வேலை திட்டம் தடைபட்டு விடும். வீட்டு வரி, சொத்து வரி உயர்ந்துவிடும்.
தண்ணீர் வரி உயர்ந்துவிடும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கள் ஊராட்சிகள் கிராம ஊராட்சியாகவே இருக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்தனர். இதையடுத்து தேர்தல் பிரசாரத்திற்கு வந்த வாகனங்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும் தடுத்து ஊருக்குள் வர வேண்டாம் என்று பதாகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.