ஆவுடையார்கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சின்ன பட்டமங்கலம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கருணாகரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த கிராம மக்கள் அந்த பேனரை அகற்றினர்.
இந்தநிலையில் சாலை வசதி இல்லாததால் நல்லிக்குடி, கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சின்ன பட்டமங்கலம் கிராமத்திற்கு அடிப்படை வசதியான சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்த தரக்கோரி கிராமமக்கள் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பேனரை வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.