பிறப்பு பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தையின் மதத்தை தெரிவிப்பது கட்டாயம் புதிய விதிமுறை முழு விவரம்




பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவது கட்டாயமாகிறது. குழந்தையை தத்தெடுப்பதற்கு பெற்றோரின் மதத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும்.மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி இது அமலுக்கு வருகிறது. 

இந்த விதிகளை மாநில அரசுகள் முன்பு முறையாக ஏற்றுக்கொண்டு அது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பிறப்பு பதிவேட்டில் சட்ட தகவல், புள்ளிவிவர தகவல் என இறுவேறு தகவல்கள் அமைந்திருக்கும். அதில் பெற்றோர்களின் மதம் என்பது தகவலுக்காகவே பெறப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் பதிவு செய்துவந்த நிலையில், தற்போது பிறப்பு பதிவுக்கான படிவம் 1 இல் சில திருத்தங்களுடன் அமலுக்கு வந்துள்ளது. அதில் 

புதிய விதிமுறையில் தாயின் மதம், தந்தையின் மதம் என இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டு அதற்கு நேரெதிரில் தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் குழந்தைக்கு வழங்கப்படும். குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிறப்பு பதிவேட்டில் பெற்றோர்களின் ஆதார் எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியும் பதிவிடவேண்டும் அதேபோல்  முகவரி விவரத்தில் மாநிலம், மாவட்டம், நகரம் அல்லது கிராமம், வார்டு எண், அஞ்சல் பின்கோடு ஆகியவற்றைச் சேர்ப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா, 2023 கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments