மாவட்டத்தில் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்பட்டன. இதையடுத்து காஞ்சீபுரத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை நடைபெற்றது.

கூடுதல் எந்திரங்கள்

இதையடுத்து கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கணினி குலுக்கல் முறையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணி நடந்தது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ் குமார், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மெர்சி ரம்யா ஆகியோர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டன.

லாரிகளில் அனுப்பி வைப்பு

அதனைதொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெட்டியில் எடுத்து வைக்கப்பட்டு லாரிகள் மூலம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, இலுப்பூர் தாசில்தார் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன் பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்து, அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணன் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு), ரம்யாதேவி (காவிரி-வைகை-குண்டாறு), வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்) உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments