மெயின் லைன் வழியாக கச்சிகுடா-மதுரை சிறப்பு ரெயில் ஜூன் மாதம் வரை இயக்கம்





கும்பகோணம், தஞ்சை வழியாக கச்சிகுடா-மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது 

கூடுதல் ரெயில்

தமிழகத்தில் உள்ள ரெயில் பாதைகளில் திருச்சி- தஞ்சை - விழுப்புரம் இடையேயான மெயின் லயன் ெரயில் பாதை பழமையான பாதைகளில் ஒன்றாகும்.

இந்த வழித்தடத்தில் சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த பாதையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். திருச்சி ரெயில்வே கோட்டத்தில், டிக்கெட் வருமானத்தில் முதல் 5 இடங்களில் கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன.

பொங்கல், தீபாவளி, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு பண்டிகை நாட்களுக்கு சென்னை, பிற மாநிலங்கள் மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சில ரெயில்கள் காலம் நீட்டிப்பு செய்து வருகிறது. அதன்படி மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா நகருக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறப்பு கட்டண ரெயில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.





சிறப்பு ரெயில்கள்

கச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரெயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து ஏப்ரல் 8-ந்தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 7.15 மணிக்கு கும்பகோணத்திற்கும், 7.29 மணிக்கு பாபநாசத்திற்கும், 8.23 மணிக்கு தஞ்சைக்கும் வந்து செல்லும்.

தொடர்ந்து இரவு 1.20 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் மதுரை - கச்சிகுடா வாராந்திர சிறப்பு ெரயில் (07192) மதுரையில் இருந்து வருகிற 10-ந்தேதி முதல் ஜூன் 26-ந்தேதி வரை காலை 11.55 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 3.10 மணிக்கும், பாபநாசத்திற்கு 3.37 மணிக்கும், கும்பகோணத்திற்கு 3.50 மணிக்கும் வந்து செல்லும்.

மறுநாள் பகல் 1.25 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.

பயணிகள் பாராட்டு

இந்த ெரயில்கள் தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் முன்பதிவில்லா பொது பெட்டிகள் 2, முன்பதிவுடைய 2-ம் வகுப்பு இருக்கை பெட்டிகள், ஏசி பெட்டிகள் என 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களை பயணிகள் முற்றிலும் பயன்படுத்தி கொண்டு நிரந்தர ரெயிலாக மாற்ற ஒத்துழைப்பு தரவேண்டும். சிறப்பு கட்டண ரெயில் இயக்க நடவடிக்கை எடுத்த தென்னக ரெயில்வே மற்றும் திருச்சி கோட்ட ரெயில் நிர்வாகத்திற்கு பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments