தமிழகத்தில் நோன்பு பெருநாள் வியாழக்கிழமை -தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு!..
தமிழகத்தில் பிறை தேட வேண்டிய நாளான இன்று 09.04.2024 எங்கும் பிறை தென்படாத காரணத்தினால் ரமலான் மாதத்தின் நோன்பை முப்பதாக பூர்த்தி செய்து இன்ஷா அல்லாஹ் வரும் 11.04.2024 வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்.
இன்று 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று தமிழகத்தில் எந்த இடத்திலும் பெருநாள் பிறை தென்படவில்லை. ஆகையால் நாளை 10.04.2024 புதன்கிழமை ரமலான் பிறை 30 ஆகக் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டுமெனவும், 11.04.2024 வியாழக்கிழமை ஈதுல் ஃபித்ர் பெருநாள் ஆகும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments