மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினத்தில் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் பேரவை மற்றும் ஊர் ஜமாதார்கள் இணைந்து 10,11, 12 மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டுவோம். கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நேரம்: காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை
இடம்: அல்- மஸ்ஜித் தக்வா ஆர்.புதுப்பட்டினம்
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு
எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்காலம்? எந்த கல்லூரியில் படிக்கலாம்?
மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு
தயாராவது எப்படி ?
பெண்களுக்கு ஏற்ற படிப்புகளும் அதற்கான சிறந்த வாய்ப்புகளும்
குறைந்த செலவில் உள்ள சிறப்பான படிப்புகள்
குறைவான மதிப்பெண் எடுத்தவற்கான கல்வி வழி காட்டுதல்கள்
வழிகாட்டல் வழங்குபவர்
M. அப்துல் மதீன் B.Tech., ஆலோசகர்கள்,விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி
வாருங்கள் அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக உருவாக்குவோம் இன்ஷா அல்லாஹ்
அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் ஜமாதார்கள் R.புதுப்பட்டிணம்
அறிவார்த்த சமூகத்திற்கு ஆயுதங்கள் தேவையில்லை என்றால் அல்லமல் இக்பால்
அழிவு ஆயுதத்தை விட அறிவு ஆயுதம் தான் இந்த உம்மத்திற்கான முதல் தேவை என்றார் மலேசியாவின் சிற்பி மஹாதீர்...
உன்னிடம் இருந்து பறிக்க முடியாத சொத்து கல்வி என்றார் அம்பேத்கர்..
எனவே..
இது வெறும் பத்தோடு ஒன்றாய் அத்தோடு இதுவும் ஒன்றாய் நடக்கும் நிகழ்ச்சி அல்ல இது நமது குடும்பத்தின் எதிர்காலத்தை நமது சமுதாயத்தின் எதிர்காலத்தை நமது ஊரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.
நீங்கள் கற்பவராக இருங்கள் அல்லது கற்பிப்பவராக இருங்கள் அல்லது இந்த இரண்டு பேருக்கும் உதவியாக இருங்கள் என்பதுதான் இஸ்லாம் காட்டும் வழிகாட்டுதல்..
வேதங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டும்தான் உரியது என்று வேத பரப்புரைகள் நடந்த இவ்வுலகில் *இக்கர ஓதுவீராக* என்ற வார்த்தையை கொண்டு இறை வேத முதல் வசனத்தை இறக்கி இவ்வுலகத்தின் தொடக்கத்தை கற்றலில் இருந்து போதிக்கிறது இஸ்லாம்...
எனவே நமது ஊரில் இருக்கும் மக்களும் அருகிலே இருக்கும் ஊர்களில் இருக்கும் உறவினர்களையும் அழைத்து இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வையுங்கள் குறிப்பாக கல்வி பயிலும் அனைவரும் தவறாது கலந்து கொண்டு உங்களின் எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்..
அல்லாஹ் உங்களுக்கு வளத்தையும் அருளட்டும்...
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.