சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் வாகனப்பதிவு ரத்து செய்யப்படுவதுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.
மதுபோதையில் விபத்து 2 பேர் பலி
மராட்டிய மாநிலம் புனேயில் சமீபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதில் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்தநிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் சிவாஜி சவுக் பகுதியில் சொகுசு காரின் முன் பக்கம் ஒருவர் அமர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுபோன்று சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதுடன் அதன் மூலம் விலை மதிப்பில்லாத உயிர்களும் பலியாவதை தடுக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையும் அதிரடி நடவடிக்கையில் இறங்கி வருகிறது. புதிய வாகன சட்டத்தை வருகிற 1-ந்தேதி முதல் கடுமையாக அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது.
பெற்றோருக்கு 3 மாதம் சிறை
இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, ‘தமிழ்நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் மற்றும் 3 மாத சிறை தண்டனையும் விதிக்க புதிய வாகனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வாகனம் ஓட்டிய நபருக்கு 25 வயது வரை ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது.
அதேபோல், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வண்டி ஓட்டி பிடிபட்டால் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும். அத்துடன் சிறுவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 25 வயது வரை ஓட்டுனர் உரிமமும் வழங்கப்படாது. இது வருகிற ஜூன்-1ந்தேதி முதல் கடுமையாக அமலுக்கு கொண்டு வரப்படும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
அதேபோல் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துகளில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்படுகிறது. விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் நபர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், பலத்த காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
பாதிக்கப்படும் நபர்கள் ஆர்.டி.ஓ. அல்லது தாசில்தாரிடம் விண்ணப்பித்தால் அதுகுறித்து 1 மாதம் விசாரிப்பதற்கு கால அவகாசம் எடுத்து கொள்ளப்படும். பின்னர் 15 நாட்களில் உரிய அனுமதி பெற்று, பொது காப்பீடு சபையில் இருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கலெக்டர் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும்' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.