விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு அரசு வனத்துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம் சார்பில், கடல்பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு சுமார் 30 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட கடல்பசு உருவ மணல் சிற்பத்தை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமையிலான குழுவினர் சுமார் 1 மணி நேரம் 30 நிமிடத்தில் தத்ரூபமாக உருவாக்கினர்.
தொடர்ந்து மனிதச் சங்கிலி அமைத்து கடல்பசுவை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, வெளிவயல் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், கடல்பசு மற்றும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மீட்டு கடலில் விட்ட மீனவர்கள் 9 பேருக்கு வனத்துறை சார்பில் ரூ.27 ஆயிரம் ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடல்பசு பாதுகாப்பு மையம்
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி பேசுகையில், தஞ்சை மாவட்டம் மனோராவை தலைமை இடமாகக் கொண்டு, அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு, தமிழ்நாடு அரசு கடல் பசு பாதுகாப்பு மையத்தை அமைக்க உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டில் மற்றும் 3 கடல் பசு மற்றும் 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டு மீனவர்களால் கடலில் விடப்பட்டுள்ளது. அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்றார்.
இதில், உதவி வனப்பாதுகாவலர் சாந்தவர்மன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல கணக்கு அலுவலர் பூபாலன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர், இந்திய வனவிலங்கு நிறுவன ஆராய்ச்சியாளர் சுவேதா, உதவி ஆராய்ச்சியாளர் அஜித்குமார், நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் ஜெயபால், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மீனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், மாணவ, மாணவிகள், மீன்வளத்துறை சாகர் மித்ரா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.