பஸ் கவிழ்ந்தது
புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறைக்கு தனியார் பஸ் ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை இலுப்பூர் அருகே ஆரியக்கோன்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் யுவராஜ் (வயது 27) என்பவர் ஓட்டினார். புதுக்கோட்டை அருகே அன்னவாசல் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பஸ் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அலறினர். சிலர் பஸ் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறினர். இதற்கிடைேய பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பஸ்சில் இருந்து வெளிேயறி தப்பி சென்று விட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பஸ்சில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் காயமடைந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளை அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் மணியன் தலைமையிலான மருத்துவக்குழுவினர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடைேய இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, தாசில்தார் சூரியபிரபு, அன்னவாசல் இன்ஸ்பெக்டர் லதா, அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, பேரூராட்சி தலைவர் சாலை பொன்னம்மா மதுரம், தி.மு.க. நகர செயலாளர் முகமது ரிஷா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
30 பேர் படுகாயம்
இதையடுத்து படுகாயமடைந்த அன்னவாசலை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் மதன்குமார் மனைவி கர்ப்பிணியான பிரியா (24), காலாடிப்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவன் விஸ்வநாதன் (16), மோகன்ராஜ் (14), முத்துலட்சுமி (40), பாண்டியன் (19), கவுசல்யா (28), மாரியாயி (65), பிரகாஷ் (24), லட்சுமணன் (20), ரம்ஜான் (45), ரேவதி (35), சக்தி (65), நரேஷ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர் களை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.